திண்டுக்கல்லில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பலகை செயல்படாததால் தற்போது மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள், ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றனர். இதற்காக 6 நடைமேடைகள் உள்ளன. ரயில் பெட்டிகள் இந்த நடைமேடைகளில் நிற்கும் இடத்தை தெரிவிப்பதற்காக டிஜிட்டல் பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த டிஜிட்டல் பலகையில் ரயில்கள் வரும் போது பெட்டிகளின் எண் ஒளிரும் இதனால் பெட்டியை அறிந்து பயணிகள் தங்கள் பயணிக்க வேண்டிய பெட்டிகளில் எளிதாக ஏறி கொள்வார்கள். அதன் பராமரிப்பு பணி தனியாருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக டிஜிட்டல் பலகைகள் முறையான பராமரிப்பு இல்லாததால் செயல்படவில்லை.
இதனால் பயணிகள் ரயில் பெட்டிகள் எந்த இடத்தில் நிற்கும் என்பதை அறிய முடியாமல் தவித்து வந்தனர். வெளியூருக்கு குடும்பத்துடன் செல்வோர் பெரும் சிரமப்பட்டனர். எனவே இதற்கான மாற்று ஏற்பாடு பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்டிகளின் நிலையை குறிப்பிட்டு பலகைகள் டிஜிட்டல் பலகைகளுக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்றன. அது தற்போது ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. அதேசமயம் டிஜிட்டல் பலகைகளை சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் மற்றும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.