பெரம்பலூரில் 7 வாகனங்கள் தகுதிசான்று இல்லாமல் இயக்கப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஆகியோர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனங்களில் செல்பவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா ? என்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 2 சரக்கு வாகனங்கள், மூன்று ஆட்டோக்கள், சுற்றுலா வேன், ஒரு கார் என மொத்தம் 7 வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து ஷேர் ஆட்டோ மற்றும் ஆட்டோக்களில் பயணம் செய்பவர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்.