Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது இல்லாம வெளிய வராதீங்க… மீறினால் அபராதம்… மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்லில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கும் படி மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

வெளிமாநிலங்களில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மீண்டும் தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். அதன்படி திண்டுக்கல்லில் உள்ள பேருந்து நிலையங்களில், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை முக கவசம் அணியாமல் 40 பேர் அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளனர். இந்த 40 பேருக்கும் தலா ரூ. 200 அபராதம் வீதம் ரூ.8000 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதேபோல் சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன் தலைமையில் தாடிக்கொம்பு பேருந்து நிலையம் அருகே உள்ள பகுதியில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு முக கவசம் அணியாமல் வந்த 31 பேரிடம் அதிகாரிகள் ரூ.200 அபராதமாக பெற்றனர். மொத்தம் ரூ. 14,200 மாநகராட்சி அதிகாரிகள் அபராதமாக வசூலித்துள்ளனர்.

Categories

Tech |