தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று தெரிவித்தார். இதையடுத்து தேர்தலை ஒட்டி முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை மக்களை ஈர்க்கும் வண்ணம் அறிவித்தார். இந்நிலையில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டார். இது பல்வேறு தரப்பினரிடையே வரவேற்ப்பை பெற்றது. ஆனால் ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழக இளைஞர்களுக்கு துரோகமிழைத்த தமிழக அரசை கண்டித்து DYFI சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான DYFI உறுப்பினர்கள் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி உள்ளனர்.