கொலம்பியாவில் நடந்த அதி பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளார்கள்.
கொலம்பியாவிலுள்ள ஆண்டுயோகுயா மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக லாரியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்கள். இந்நிலையில் இவர்களது லாரி அம்மாநிலத்திலுள்ள கிராம பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டின் மீது ஏறியுள்ளது. இதனையடுத்து அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் லாரியிலிருந்த 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலுக்கு பின்னணியில் வளைகுடா கிரிமினல் கும்பல் இருக்கலாம் என்று காவல்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும் இந்த குண்டு தாக்குதலை நடத்தியவர்களை காவல்துறை அதிகாரிகள் தேடும் பணியில் களமிறங்கியுள்ளார்கள்.