சிவகங்கை மாவட்டம் கொடிமங்களம் பகுதியில் உள்ள ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே கொடிமங்களம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அடிபாகம் மிகவும் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் எந்த நேரத்திலும் கீழே விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால் விபரீதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே விபரீதம் எதுவும் ஏற்படாமல் தடுக்க இதை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.