உங்களில் ஒருவன் பதிவுகள் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்கு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். இதற்கு உங்களில் ஒருவன் பதிவுகள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கேள்வி: நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற முழுக்கத்தை முன் வைத்துள்ளீர்கள். அதை நிறைவேற்றுவதற்கு 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அரசியலில் உங்கள் தலைமையிலான கழகத்தின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்று கேட்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதில் : தமிழ்நாடு புதுவை மாநிலங்களில் தற்போது 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்பது திமுகவின் இலக்கு. மேலும் இந்தியா முழுவதும் சமூக நீதியும், கூட்டாட்சி அடிப்படையில் நம்பிக்கையான ஆட்சி அமைய வேண்டும் என்பது நமது அடுத்த இலக்கு. இதற்கான அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் இறங்குவோம் என கூறியுள்ளார்.
கேள்வி: கோபாலபுரம் டூ கோட்டை இந்த நூற்றாண்டு கால பொது வாழ்க்கையை நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள்?
முதலமைச்சர் பதில்: பொது வாழ்க்கை என்பது முள் கிரீடம் என்பது போல் சொல்வார்கள். என்னுடைய பொது வாழ்க்கைக்கு அங்கீகாரம் என்பது தலைவர் கலைஞர் சொன்னதுதான், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பது மட்டுமே என்னை பொருத்தவரை அந்த உழைப்பால் மக்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பது தான். அதுதான் எனது பொது வாழ்க்கை, கழகப் பொறுப்புகள் பொருத்தவரைக்கும் கோபாலபுரத்தில் 13 வயது இளைஞராக கோபாலபுரம் இளைஞர் திமுகவை தொடங்கினேன். அதன் பிறகு 50 ஆண்டுகள் சுமந்து வந்ததால் தான் இன்று கழகத்தின் இரண்டாவது முறையாக தலைவராக கழக உடன்பிறப்புகளால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்.
மேலும் மக்கள் பணியை பொருத்தவரைக்கும் மேயராக நான் ஆற்றிய பணிக்கு தலைநகர் சென்னையின் வளர்ச்சியை சாட்சியாக இருக்கிறது. மேலும் அமைச்சராக, துணை அமைச்சராக என் நெஞ்சத்திற்கு நெருக்கமான திட்டங்களை பலமுறை எடுத்து கூறியுள்ளேன். இந்நிலையில் ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு போன்ற திட்டங்கள் தற்போது முதலமைச்சராக காலை உணவு திட்டம், மகளிர்க்காண இலவச பயண திட்டம் , நான் முதல்வன் திட்டங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் திட்டங்கள். ஏனென்றால் அரசியல் கால் புணர்ச்சியோடு பேசப்படுவது என் காதுகளுக்கு எட்டுமே தவிர அவற்றை என் மனதிற்கு எடுத்துச் செல்வதில்லை. என் சிந்தனை எல்லாம் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கொண்டு வர வேண்டும். அவர்கள் முகங்களில் மகிழ்ச்சியை விதைக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டு மக்களுக்கு பணியாற்றுவது என் வாழ்வின் கடமையாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.
கேள்வி: பாஜகவுடன் திமுக சமரசத்திற்கு போய்விட்டதாக சிலர் சொல்கிறார்களே அது உண்மைதானா?
முதலமைச்சர் பதில்: இப்படி யார் சொன்னாலும் அதை பாஜகவே ஏற்றுக் கொள்ளாது.
கேள்வி: இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள். அதனால் ஆட்சியை வழிநடத்த புதிய திட்டம் ஏதேனும் இருக்கிறதா?
முதலமைச்சர் பதில்: அண்ணா வழியில் அயராது உழைப்போம், கலைஞர் கருணாநிதியின் கட்டளையை கண் போல் காப்போம், என்பது அடிப்படையில் திராவிட மாடல்தான் இப்போது எனது பாதை கொள்கை, கோட்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை கழகத் தொண்டர்கள் உடன்பிறப்புகள் உணர வேண்டும். தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கும் வழிகாட்டியாக திமுக இருக்க வேண்டும். இனி தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் தான் ஆளும் என்ற நிலை ஏற்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.