ராணி தனது இறுதி ஊர்வலத்திற்காக பார்த்து பார்த்து காரை வடிவமைத்துள்ளார்.
பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எரிசபெத் உடல்நல குறைவு காரணமாக தனது 96 -வது வயதில் கடந்த 8-ஆம் தேதி பால்மோரலில் உள்ள அவரது தோட்டத்தில் உயிரிழந்தார். இதனால் அவரது உடல் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவரது உடல் funeral Home -இல் இருந்து Mercedes Benz அமரர் ஊர்த்தியல் எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் அவரது ஊர்வலத்திற்கு முழுக்க முழுக்க அரச குடும்பத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு custom-designed ஜாகுவார் வாகனம் பயன்படுத்தப்பட்டது. இந்த வாகனம் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ராணி இரண்டாம் எலிசபெத் தான் இறப்பதற்கு முன்பாக இந்த வாகனத்தின் வடிவமைப்பு திட்டங்கள் குறித்து இறுதி மாதிரிக்கு அவரே ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த வாகனம் 2010 jaguar XJ saloon அடிப்படையாக கொண்டது. மேலும் ஹவுஸ்ஹோல்ட் மற்றும் ஜாகுவார் லேண்ட்ரோவரால் வடிவமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பிரத்தியேக ஜாகுவார் கார் royal claret நிறத்தில் உள்ளது. இது துக்கம் அனுசரிப்பவர்கள், அஞ்சலி செலுத்துபவர்கள் சவப்பெட்டியை தெளிவாக பார்க்கும்படி உயரமாகவும் பாரீர் ஹூட்பெரிய கண்ணாடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காரில் இருக்கும் சவப்பெட்டி நன்றாக வெளியே தெரியும்படி ஸ்பாட் லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் வாகனத்தின் இரு பக்கத்திலும் ராணியின் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது. டிராகனைக் கொன்ற செயின்ட் ஜார்ஜின் வெள்ளி மூலம் பூசப்பட்ட வெண்கல சிலையுடன் கூடிய அதிக அளவில் நீட்டப்பட்ட ஜாகுவார் செடானாக இந்த வாகனம் அடிமைக்கப்பட்டுள்ளது.