Categories
உலக செய்திகள்

இது உண்மைதானா?…. பால்மோரல் அரண்மனையில் 5 முறை உருவான வானவில்…. ஆச்சரியத்தில் ஆழ்ந்திருக்கும் அரச குடும்பத்தினர்….!!!!

ராணி இரண்டாம் எலிசபெத் வாழ்ந்த பால்மோரல்  அரண்மனையில் 5  முறை வானவில் உருவானது அரச குடும்பத்தினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ஆம்  தேதி உடல்நிலை குறைவு  காரணமாக பால்மோரல்  அரண்மனையில் உயிரிழந்தார். இவருக்கு நாட்டு மக்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். அப்போது பின்னழியில் நின்று பணியாற்றி தூக்கிச் செல்லும் கழிவறையில் பணிபுரிந்தோர், குப்பையை அகற்றியோர்  மற்றும் மகாராணிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் குவித்த மலர்களை அகற்றி தூய்மைப்படுத்திய முதலான பணியாளர்களுக்கு இளவரசர் வில்லியம் நன்றி  தெரிவித்தார். இந்நிலையில்  ஸ்காட்லாந்தில் வானவில்லை பார்ப்பது என்பது அபூர்வமான ஒன்று. ஆனால் மகாராணியார் கடைசியாக தங்கி இருந்த பால்மோரல்  மாளிகையின் மீது மட்டும் 5  முறை வானவில் உருவானது என இளவரசர் வில்லியம் கூறினார்.

அதற்கு இளவரசி கேட் மகாராணியார் மேலிருந்து நம்மை பார்த்தது தான் அந்த வானவிலுக்கு அர்த்தம் என கூறினார். மேலும் இது போன்ற ஒரு ஒரு வானவில் விண்ட்சர்  மாளிகையின் மீது உருவானதை ஏராளமான மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில்  மகாராணியாருக்கு  பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது மீண்டும் ஒரு வானவில் தோன்றியதால் மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

Categories

Tech |