தமிழகத்தில் உள்ள கோவில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை அதிமுக அரசு கொண்டுவந்த நிலையில், அதற்கான பணி நியமன ஆணையையும் தமிழக முதல்வர் வழங்கினார். இதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் எதிர்கட்சியினரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பணியிலுள்ள எந்த ஒரு அர்ச்சகரையும் பணியில் இருந்து வெளியேற்றுவது இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம் இல்லை. காலிப் பணியிடங்களில் தான் பணியாளர்களை நியமிக்கிறோம். இறைவனுக்கு பூஜை செய்கிற அர்ச்சகர்களை நாங்கள் வணங்குகிறோம். இப்போது நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைள் கூட இறையன்போடு இறைப்பணி தொடர வேண்டும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் என்று கூறியுள்ளார்.