வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவத்தில் ஏற்பட்ட தகராறில் அண்ணன் தம்பியை தாக்கி மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருணாச்சலம் என்ற மகன் உள்ளார். இவர் விவசாய வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அருணாச்சலம் தன்னுடைய வயலுக்கு மின் மோட்டார் மூலமாக தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த போது அவரின் அண்ணனான முருகேசன் என்பவரும், அண்ணி ஜோதி என்பவரும் சென்றுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் வயலில் உள்ள கிணறு பொதுவானது என்றும், அதில் உள்ள தண்ணீரை ஆளுக்கு ஒரு நாள் தான் வயலுக்கு பாய்ச்ச வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கோவம் அடைந்த முருகேசன் தான் வைத்திருந்த கோடுவாளால் தம்பி என்று கூட பாராமல் அருணாச்சலத்தை தாக்கி மிரட்டியுள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ளவர்கள் அருணாச்சலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து அருணாச்சலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முருகேசன்மற்றும் அவரின் மனைவியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.