உத்தரப் பிரதேசத்தில் வரதட்சனை கொடுமையால் நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த தம்பதிகள் அப்சர் – தபஸும் பேகம். இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து தபஸும் பேகம் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் தபஸும் பேகமின் மாமனார், மாமியார், நாத்தனார் மூவரும் சேர்ந்து போதுமான வரதட்சனை கொண்டுவரவில்லை என்று அடிக்கடி அவரை துன்புறுத்தியுள்ளார். இதில் மன உளைச்சலுக்கு ஆளான தபஸும் பேகம் சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இச்சம்பவம் அறிந்த தபஸும் பேகமின் சகோதரர் எனது அக்காவை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டு அதை மறைப்பதற்காக அவள் தற்கொலை செய்துகொண்டது போல் நாடகம் ஆடுவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நபர் மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.