மொரப்பூர் அருகே அ.ம.மு.க.-அ.தி.மு.க. க்கு சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் தம்பி செட்டிபட்டியில் உள்ள தனியாருக்கு உரிமையான சுவர் ஒன்றில் அ.ம.மு.க நிர்வாகிகள் விளம்பரம் செய்தனர். அதே நேரத்தில் தம்பி செட்டிப்பட்டி பகுதி அ.தி.மு.க கிளை செயலாளர் ஆறுமுகம், 60 வயதுடைய இவர் இந்த இடத்தில் ஏற்கனவே விளம்பரம் நாங்கல் எழுவதற்கு அனுமதி பெற்று உள்ளோம் என்றும், நீங்கள் விளம்பரம் செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து அ.ம.மு.க நிர்வாகிகளுக்கும் – ஆறுமுகத்திற்கு இடையே ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. கிளை செயலாளர் ஆறுமுகத்தை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் குறித்து ஆறுமுகம் மொரப்பூர் காவல்துறையிடம் புகார் செய்துள்ளார். புகாரின் அடிப்படையில் அவரை தாக்கிய அ.ம.மு.க. முன்னாள் எம்எல்ஏ முருகன் உள்ளிட்ட 8 பேர் மீது மொரப்பூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றார்.