Categories
உலக செய்திகள்

இது எங்கள் மத அடையாளம்…. பிரபல நாட்டில் “கடற்படையில் சீக்கியர்கள் தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ளலாம்”…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில்  தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பல நாடுகளில் சீக்கிய இனத்தை சேர்ந்த ஆண்கள் தலைப்பாகையும், தாடியும் வைத்துள்ளனர். இவர்கள் அதனை தங்களது மத அடையாளமாக கருதுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் கடற்படைக்கு ஏகாஷ் சிங்க், ஐஸ்கிரத்  சிங், மிலாப் சிங் என்ற 3 சீக்கியர்கள் தேர்வாகியுள்ளனர். ஆனால் அவர்கள் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என்றால் தலைப்பாகையையும், தாடியையும் அகற்ற வேண்டும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் 3  பேரும் தலைப்பாகை மற்றும் தாடியுடன் பயிற்சியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |