Categories
உலக செய்திகள்

“இது எங்க ஏரியா உள்ள வராத”… வான் பகுதியில் விமானங்கள் பறக்கக் கூடாது…. தடை விதித்த ரஷ்யா…

ரஷ்யா தனது வான் பகுதியில் நான்கு நாடுகளின் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது.

லாட்வியா, லிதுவேனியா, சுலோவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களின் விமானங்கள், அந்நாடுகளில் பதிவு செய்யப்பட்ட விமான  நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரஷ்யா தனது வான்பகுதியை மூடியுள்ளது.

மேற்கண்ட நாடுகளில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் எதிர்மறையான முடிவுகள் எடுத்துள்ளதால் ரஷ்யாவில் உள்ள நகரங்களுக்கு இந்த விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  வான்வெளியில் நிற்கும் தங்கள் பகுதியை மேற்கண்ட நாட்டு விமானங்கள் பயன்படுத்தக்கூடாது என விமான போக்குவரத்து நிறுவனம் கூறியுள்ளது.

Categories

Tech |