கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்களை கடந்துவிட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ரஷ்யா பல உக்ரைனிய நகரங்களின் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் கூறியதாவது “உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய ராணுவ படையெடுப்பு தொடங்கியது.
இந்த தாக்குதல்களை உக்ரேன் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கார்கிவ் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ரஷ்ய ராணுவ படைகள் சரமாரியாக நடத்திய ஏவுகணை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.