ராணி இரண்டாம் எலிசபெத்தை பற்றி மேகன் பெருமையாக பேசியுள்ளார்.
பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத் உயிரிழந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் ஆகியோர் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது மேகன் கூறியதாவது. ராணியுடனான எனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நினைத்துப் பார்த்தேன். அது எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை உணர்கிறேன். மேலும் நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். ஏனென்றால் அரச குடும்பத்தில் இப்படி ஒரு பெண் தலைமையில் ஒரு நல்ல அரவணைப்பை பெற்றதில் நான் தொடர்ந்து பெருமைப்படுகிறேன். இதனையடுத்து ராணியார் இறந்தபோது எனது கணவர் இளவரசர் ஹரிக்கு ஆதரவாக அவருடன் இருக்க முடிந்ததற்கும் நன்றியுடன் நான் இருப்பேன். குறிப்பாக அந்த காலத்தில் எனது கணவருக்கு ஆதரவாக அவருடன் இருக்க முடிந்ததற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
அவருடைய பாட்டி விட்டு சென்ற மரபை பார்ப்பது மிகவும் அழகாக இருக்கிறது, பல முறைகளில் நிச்சயமாக பெண் தலைமையை பொறுத்தவரை அது எப்படி இருக்கும் என்பதற்கு அவர் உதாரணம். இந்நிலையில் நான் அவருடன் நேரம் செலவழிக்கவும், அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும் முடிந்ததற்கு நான் மிகவும் நன்றி கடன் பட்டுள்ளேன். அது ஒரு சிக்கலான நேரமாக இருந்தது. இந்நிலையில் ராணியாரின் மரணம் குறித்து மேகன் அளித்த முதல் அறிக்கை இதுவாக இருந்தாலும், அவரும் ஹரியும் தங்களது ஆர்க்கிவெல் இணையதளத்தை டார்க்காக மாற்றி நீண்ட காலம் ஆட்சி செய்த பிரித்தானிய ராணிக்கு அஞ்சலி செலுத்தினர். இப்போது எலிசபெத் மகாராணியை பற்றிய மேகனின் நேர்காணல் வெளிவந்துள்ளது என்பதால் மேகன் ஒருவகையில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.