Categories
மாநில செய்திகள்

இது எனது அரசு அல்ல…. நமது அரசு…. “பாரதியாரின் நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும்”… முதல்வர் முக ஸ்டாலின்!!

ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்..

வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடந்துவருகிறது.. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் பங்கேற்றனர்.. பாரதி சுடரை ஏற்றி இந்த விழாவை தொடக்கி வைத்த பின் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்..

அவர் பேசியதாவது, குடும்பமாக இருந்தாலும், அரசாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர் பாரதி. அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் மற்றும் பாடல் ஒரு போதும் மறையாது. பல ஆயிரம் சிந்தனைகளை கொண்டவர் பாரதி. பாரதியின் கவிதை, பாடல்களை மக்களின் மனதிலிருந்து நீக்க முடியாது, பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை.

ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும். இது எனது அரசு அல்ல நமது அரசு, பாரதியார் இன்றும் தேவைப்படுகிறார், பாரதி காலத்தின் தேவை. பாரதி குறித்த முக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் அமையவுள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் பாரதியாரின் நூல்களுக்கு தனி பிரிவு அமைக்கப்படும் என்றார்.

Categories

Tech |