வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியார் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பல ஆயிரம் சிந்தனைகளைக் கொண்டவர் பாரதி.
அவருடைய கவிதைகளை மக்களின் மனதிலிருந்து நீக்கவே முடியாது. பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு எப்போதும் இருக்கும். இது எனது அரசு அல்ல, நமது அரசு. பாரதியார் இன்றும் தேவைப்படுகிறார் என்று கூறினார்.