கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில் வசிக்கும் ஒரு இளைஞர் தனது மனைவியை கடந்த இரண்டு வருடமாக மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் சம்பாதித்துத் தர வேண்டும் என்று கூறி துன்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அந்த வாலிபர் தனது மனைவி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த அவரது நண்பர்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து கோபத்துடன் வெளியேறினார். இதுகுறித்து கருகச்சால் காவல் நிலையத்திற்கு சென்று கணவர் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் கணவரை அழைத்து விசாரணை செய்தனர். அதில், நாங்கள் சமூக வலைதளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருகிறோம். இந்த குரூப்பில் தற்போது 2000 பேர் அங்கத்தினராக செயல்பட்டு வருகிறார்கள். நாங்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் ஏதாவது ஒரு நண்பன் வீட்டில் குடும்ப விழா என்ற பெயரில் விருந்து ஏற்பாடு செய்து ஏராளமான நண்பர்களுக்கு அழைப்பு விடுப்போம். இந்த விழாவில் மது, பிரியாணி உள்ளிட்ட அனைத்து வகையிலும் ஏற்பாடு செய்வோம். அங்கு நாங்கள் அழைத்துச் சென்றுள்ள எங்களது மனைவிகளை அந்த நண்பர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் பறிப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சிகளை ஓட்டல், லாட்ஜ் போன்ற இடங்களில் நடத்தினால் மற்றவர்களுக்கும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்படும் என்பதால் ஏதாவது நண்பர் வீட்டில் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சியை கொண்டாடி வருகிறோம்.
இதன் மூலம் எங்களுக்கு ஆயிரக்கணக்கான வருமானம் கிடைக்கிறது என்று போலீசில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த போலீசார் அந்த வாலிபரின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தபோது, அதில் 2000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருப்பது தெரியவந்தது. கேரளாவில் ஜோடியை மாற்றிக்கொள்ள வாட்ஸ் அப் குழு இயங்குகிறது. அந்த குரூப்பில் ஒரு நபருக்கு போன் செய்து உனது மனைவியை அனுப்பி வை என்று வேண்டுதல் வைத்தால், அப்போது அவரின் மனைவி பிஸியாக இருக்கும்போது வேறு மனைவியை அழைத்து அனுப்பி வைப்பது இவர்களுடைய வழக்கமாக உள்ளது. மேலும் இதில் சில அரசு உயர் அதிகாரிகளும், தனியார் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும் அங்கத்தினராக இருக்க வாய்ப்புள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபரை விசாரணை செய்து 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மற்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.