முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் பாம்பு வந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்..
தற்போது நடைபெற்று வரும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டுக்காக இந்தியாவிற்கு வந்துள்ளார். இந்தியா கேப்பிட்டல் அணிக்காக ஆடி வரும் ஜான்சன் லக்னோவில் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவரது ஹோட்டல் அறையில் ஒரு பாம்பு நுழைந்தது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்சன், லக்னோவில் உள்ள தனது ஹோட்டல் அறையில் இருந்து பாம்பின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார், அது எந்த வகை என்பதை அடையாளம் காண உதவுமாறு ரசிகர்களைக் கேட்டார். “இது என்ன வகை பாம்பு தெரியுமா?? எனது அறை வாசலில் தொங்கிக் கொண்டிருக்கிறேன், எனது வாசலில் இந்த பாம்பு இருந்தது என பதிவிட்டார். இது அவரது முன்னாள் ஆஸ்திரேலிய அணி வீரர் பிரட் லீ மற்றும் தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் வெர்னான் பிலாண்டர் ஆகியோரின் எதிர்வினைகளைப் பெற்றது.
மேலே உள்ள பதிவை பகிர்ந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜான்சன் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்குச் சென்று வேறொரு கோணத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்தார்.. அதில், “இந்த பாம்பு தலையின் சிறந்த படம் கிடைத்தது. அது என்னவென்று இன்னும் தெரியவில்லை. இந்தியாவின் லக்னோவில் இதுவரை தங்கியிருப்பது சுவாரஸ்யமானது,” என்று குறிப்பிட்டார். இவரின் பதிவு வைரலாகி வருகிறது..