Categories
அரசியல்

இது என்னப்பா நியாயம்…. அப்போ மூட சொன்ன நீங்களே…. இப்ப திறந்தா எப்படி…!!!

தமிழகத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கோவிலை திறக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதுமாக பாஜக சார்பாக 12 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, பாரிமுனையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, கோவில்களில் திறக்க தமிழக அரசு அனுமதி மறுப்பதால் மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கொரோனாவை காரணம் காட்டி நம்முடைய உரிமை மறுக்கப்படும் போது இதைத் தவிர வேறு வழியில்லை. பள்ளிகளை திறக்க அரசு முடிவு எடுத்தபோது பாஜக வரவேற்பு அளித்தது.

அதேபோன்று சினிமா தியேட்டர்களை திறக்க வேண்டும் என்று சொன்னபோது கண்டனக் குரல் எழுப்பினோம். ஆனால் கோவில்களை மூடுவதற்கு ஒரு காரணமும், தியேட்டரை திறக்க ஒரு காரணம் சொல்கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த திமுக அப்போது டாஸ்மாக்கை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக டாஸ்மாக்கை திறந்து விட்டது. தேவைப்படும் போது மத்திய அரசு வழிகாட்டுதலைப் பின்பற்றுவதும், தேவையில்லாத போது மத்திய அரசை கடுமையாக விமர்சிப்பதும் திமுகவினருக்கு கைவந்த கலை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |