Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“இது என்ன இப்படி இருக்கு” பொதுமக்கள் அளித்த தகவல்…. அரிய வகை ஆந்தை மீட்ட வனத்துறையினர்….!!!!

அரியவகை ஆந்தையை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குதிரைசந்தல்  கிராமத்தில் பள்ளி ஒன்று  அமைந்துள்ளது. இந்த பள்ளியின் வேலியில் சிக்கி பறக்க முடியாமல் ஆந்தை ஒன்று தவித்து கொண்டு இருந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் படுகாயம் அடைந்த அந்த ஆந்தையை   மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு வனப்பகுதியில் கொண்டு விட்டுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது. இந்த அரியவகை ஆந்தை சத்தியமங்கலம், மதுரை போன்ற வனப்பகுதிகளில் அதிகளவில் காணப்படும். மேலும் இந்த ஆந்தைகள் கூட்டம் கூட்டமாக தான் இருக்கும். ஆனால் இங்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை என கூறியுள்ளனர்.

Categories

Tech |