பிரபல நாட்டில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கனடா நாட்டில் கியூபெக் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலினால் 16 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இந்தக் குரங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகின்றனர் என சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இந்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது சுகாதார முகாம் சிறிய அளவில் தொடங்கி ‘இம்வாமுனே’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.