Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமையடா…. மீண்டும் அதிகரிக்கும் குரங்கம்மை தொற்று…. எச்சரிக்கை விடுத்த WHO….!!

உலக அளவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கம்மை நோய் தொற்று தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 92க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகின்றது. உலக நாடு முழுவதிலும் குரங்கம்மை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் சுகாதார நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் தீவிரபடுத்தியுள்ளன. இந்நிலையில், உலகம் முழுவதும் குரங்கம்மை நோயால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து  உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கிப்ரியசஸ் கூறியதாவது, “கடந்த வாரம் கிட்டத்தட்ட 7,500 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் முந்தைய வாரத்தை விட இது 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குரங்கம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றது எனவும் மேலும் பல நாடுகளில், பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்த தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர்” கூறியுள்ளார்.

Categories

Tech |