Categories
தேசிய செய்திகள்

“இது என்ன கொடுமை” பள்ளியில் படுத்து உறங்கிய ஆசிரியை…. விசிறி விடும் மாணவி…. வைரலாகும் வீடியோ…!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாணவி ஒருவர் கைவிசிறி கொண்டு விசிறி விடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு சம்பரான் மாவட்டத்தின் பகாஹி புரைனா என்ற கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் ஆசிரியை வகுப்பறையில் மாணவர்கள் அமர்ந்திருக்கும் போது தூங்கிக் கொண்டிருக்கிறார். அவருக்கு மாணவி ஒருவர் விசிறி கொண்டிருக்கிறார்.

அதை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்திய நிலையில் தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நாற்காலியில் தான் ஓய்வெடுத்ததாக அந்த ஆசிரியர் விளக்கமளித்துள்ளார். மேலும் வேண்டுமென்றே தான் இதை செய்யவில்லை எனவும் கூறியுள்ளார். ஆசிரியை ஓய்வெடுத்துக் கொண்டதாக கூறினாலும் பள்ளியில் நடைபெற்ற இந்த செயல் கடும் கண்டனத்துக்குரியது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |