கடல் கரையில் இருந்த சாமி சிலையை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆராட்டுதுறை கடற்கரையில் நேற்று இரவு சாமி சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக ராஜக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் கனிசெல்விக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அந்த தகவலின் படி ஆய்வாளர் கனிசெல்வி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரை ஒதுங்கிய 5 அடி உயரம் உள்ள சாமி சிலையை மீட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் ஒப்படைத்துள்ளனர்.