Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு…. காணாமல் போன செல்போன் டவர்…. அதிரவைக்கும் சம்பவம்….!!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கூடல்புதூரில் அமராவதி தெருவில் அமைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் செல்போன் கோபுரம் இரு தினங்களுக்கு காணாமல் போனதாக அந்நிறுவனத்தின் மேலாளர் முத்து வெங்கடகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது செல்போன் கோபுரம் திருட்டு போனது உறுதியாகியுள்ளது.

இதையடுத்து செல்போன் கோபுரம் அமைத்துக் கொடுக்கும் ஒப்பந்ததாரர், இடத்தின் உரிமையாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் செல்போன் கோபுரம் கழற்றப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |