அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இயங்கி வருகிறது தி பெஸ்ட் இன்ஃபார்ம் என்ற பூச்சிக்கொல்லி நிறுவனம். அந்த நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வீட்டில் கரப்பான் பூச்சியை வளரவிடுவது 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. வீடுகளில் சுமார் 100 கரப்பான் பூச்சிகளை நுழைய விட்டு அதனை பெருக விட்டால் மட்டும் போதும், அதற்காக 2000 டாலர் (1.5 லட்சம் ரூபாய்)அவர்களுக்கு வழங்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய பூச்சிக்கொல்லி அமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதை பரிசோதனை செய்வதற்காக இந்த ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக ஐந்து அல்லது ஆறு பேர் தங்கள் வீடுகளில் 100 கரப்பான் பூச்சிகளை முறை அனுமதித்தால் மட்டும் போதும் என்று இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு இந்த பரிசோதனை நடைபெறும்.
இந்த சோதனையில் கரப்பான் பூச்சிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வழிகளை கண்டறிவது முதன்மையான நோக்கமாக கருதப்படுகிறது. அதன் பிறகு ஒரு மாதம் முடிந்த நிலையில் வீட்டில் உள்ள கரப்பான் பூச்சிகளை என் நிறுவனமே ஆள் வைத்து காலி செய்துவிடுவார்கள். இதனை செய்பவர் அதாவது வீட்டின் உரிமையாளர் இருபத்தி ஒரு வயதை தாண்டியவர் ஆக இருக்கவேண்டும் என்று ஒரு கண்டிசன் போட்டு உள்ளது இந்நிறுவனம்.