Categories
தேசிய செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு… சேலையில் மணமகன்… வேட்டியில் மணமகள்… ஆந்திராவில் நடைபெற்ற வினோத திருமணம்…!!!

ஆந்திர மாநிலத்தில் ஒரு வினோதமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிக்சர்பள்ளி என்ற கிராமத்தில் அங்கயா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் பெண் போல வேடமிட்டு, மணமகள் அருணா ஆண் போல வேடமிட்டு கிராம தேவதை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். அந்த மாவட்டத்தில் கும்மா என்று வீட்டுபெயர் கொண்ட குடும்பங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வழிமுறையாகும்.

இதனை ஆண்டாண்டு காலமாக கடைபிடித்து வருவதாக அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் பெண் வேடமிட்டு தான் தாலி கட்ட வேண்டும் என்பது அவர்கள் பின்பற்றும் வழிமுறையாகும். இந்தியாவில் நாகரீகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இது போன்ற கிராமங்களில் இப்படிப்பட்ட திருமணம் நடைபெறுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |