தமிழ் சினிமாவில் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தேவ், தியா என்று இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் பாபி இவர் சூர்யாவின் காக்க காக்க படப்பிடிப்பின்போது சூர்யாவிடம், “நான் உங்களை காதலிக்கிறேன். திருமணம் செய்து கொண்டால் உங்களை தான் திருமணம் செய்து கொள்வேன்.!” என எழுதி லெட்டர் ஒன்றை கொடுத்துள்ளார். அதனை வாங்கி பார்த்த சூர்யா அந்த லெட்டரை செட்டில் இருந்த அனைவருக்கும் காண்பித்ததாகவும் அதோடு நான் ஜோதிகாவை தான் காதலிக்கிறேன் என பாபியிடம் பதிலளித்துள்ளார்.
இதனை அறிந்த ஜோதிகா என்ன பாபி கொஞ்சம் சீக்கிரம் சொல்லி இருக்கக் கூடாதா.? என கூறியுள்ளார். அதற்கு பாபி இப்போது நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ஜோதிகா. சூர்யாவை நான் காதலித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனைக்கேட்ட செட்டில் இருந்த அனைவரும் சிரித்து பாபியை கிண்டல் செய்துள்ளனர். இதனை தெலுங்கு நடன இயக்குனர் பாபி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இது தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.