403 தொகுதிகள் உள்ள உத்தரபிரதேசம் சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே 6 கட்ட தேர்தல் நடைபெற்று உள்ளது. இதையடுத்து 7-ம் மற்றும் இறுதிகட்ட தேர்தல் மார்ச் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதன்பின் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல கட்சிகள் களமிறங்கியுள்ளது.
இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பா.ஜ.க. மூத்த தலைவரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடி அவர்கள் இன்று(மார்ச்.5) தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ரோட்டில் கூடிஇருந்த 1000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு மத்தியில் காரில் சென்று கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து திடீரென்று காரிலிருந்து இறங்கிய பிரதமர் பிரசாரம் நடைபெற்ற பகுதிக்கு அருகே அமைந்திருந்த டீ கடைக்கு சென்றார். அதன்பின் அங்கு இருந்த பா.ஜ.க. வேட்பாளர்களுடன் இணைந்து பிரதமர் மோடி டீ குடித்து மகிழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.