சத்தீஸ்கர் மாநிலம் தெற்கு மாவட்டம் ஜஜாங்கிரி, கும்ஹாரி போன்ற கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்ற பாரம்பரிய விழா வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் ஒருபகுதியாக சாட்டையால் அடிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது. அத்துடன் சவுக்கடி வாங்கும் பாரம்பரிய நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த பாரம்பரிய நிகழ்ச்சியில் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஸ் பாகல் கலந்துகொண்டு கைகளை நீட்டி மணிக்கட்டில் சாட்டையால் பலமுறை சவுக்கடி வாங்கினார்.
கௌரி கௌரா வழிபாட்டின்போது சவுக்கடி வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தை தரும், தீமைகள் விலகிவிடும் என நம்பப்படுகிறது. கௌரி கௌரா பூஜையின்போது மேளதாளங்கள், இசைக் கருவிகள் பின்னணியில் இசைக்க சவுக்கடி அளிக்கப்படும். இது ஆசியையும் வளங்களையும் தரும் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறு முதல்வர் சவுக்கடி வாங்கும் வீடியோவானது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.