அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் தளத்தில் திரைப்படங்களை வாடகைக்கு விடும் சேவை தொடங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைனில் திரைப்படங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் வழங்கிவருகிறது. ஒடிடி தளங்களைப் போன்று திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை சந்தாதாரர்களுக்கு வழங்காமல், அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோர் பயனாளர்களுக்கு குறிப்பிட திரைப்படத்தை குறுகிய கால கட்டத்திற்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இந்த தளத்தில் வாடகைக்கு எடுக்கப்படும் திரைப்படம் 30 நாட்களுக்கு அப்படியே இருக்கும். இருப்பினும், தரவுகளை பார்க்க துவங்கினால் அடுத்த 48 மணி நேரத்திற்கு மட்டும் இருக்கும். 48 மணி நேரத்திற்குப் பிறகு திரைப்படத்தை பார்க்க விரும்பினால் அதற்கு மீண்டும் வாடகை கொடுக்க வேண்டும்.
அமேசான் பிரைம் வீடியோ ஸ்டோரில் திரைப்படம் ஒன்றை UHD (4K) HD (1080/720p) மற்றும் SD ரெசல்யூஷனில் வாடகைக்கு எடுக்க ரூ. 499 கட்டணமாக நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் பேட்மேன் திரைப்படத்திற்கு ரூபாய் 499 வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் ரூ. 99 விலையிலும், தி மேட்ரிக்ஸ் ரிசரக்ஷன் ரூ. 149 விலையில் வாடகைக்கு கிடைக்கிறது. இதுமட்டுமில்லாமல் SD தரத்திலேயே ஸ்டிரீம் திரைப்படங்களை வாடகைக்கு எடுப்போர் அதற்கான கட்டணத்தை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலமாக வழங்கலாம்.