பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாரத் பயோடெக் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்பு பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தற்போது மூக்கு வழியாக செலுத்தும் மருந்து ஒன்றை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை அவசரகால அடிப்படையில் செலுத்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் அதற்கான சான்றிதழ்களை பெறுகின்றனர். அதேபோல் இந்த மருந்தை செலுத்திக் கொள்பவர்களுக்கும் அதற்கான சான்றிதழ் வழங்க வேண்டும். எனவே இந்த மருந்து குறித்த விவரங்களை மத்திய அரசு கோவின் வலைதளத்தில் பதிவிட வேண்டும்.
மேலும் இதுவரை இந்த மருந்தை கொள்முதல் செய்ய மத்திய, மாநில அரசுகள் எங்கள் நிறுவனத்தை அணுகவில்லை. இதனையடுத்து வெளிநாடுகளிடமிருந்து ஒப்புதல் கிடைத்தவுடன் நாங்கள் மருந்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம் என அந்த அறிக்கைகள் கூறப்பட்டுள்ளது.