கள்ளகாதலி பணம் கேட்டு மிரட்டியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள் செல்வன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லாவண்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் செல்வன் அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து அலுவலகத்தின் அருகில் வசித்து வரும் தனலட்சுமி என்ற பெண்ணுடன் செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை பயன்படுத்தி கொண்ட தனலட்சுமி செல்வனிடம் இருந்து பல லட்ச ரூபாய் வரை பணம் பெற்றுள்ளார். இந்நிலையில் செல்வன் தனலட்சுமியுடன் இருந்த தொடர்பை திடீரென நிறுத்தி விட்டார். இது குறித்து தனலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வனை அழைத்து விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தூங்க செல்வதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு அறைக்கு சேர்ந்த செல்வன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை . இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி லாவண்யா அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செல்வனின் வீட்டில் கிடைத்த தற்கொலை கடிதத்தை கைப்பற்றினர்.
அந்த கடிதத்தில் எனது சாவிற்கு தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் பொறுப்பு. இவர்களுடன் காவல் துறையில் பணியாற்றிய திருமூர்த்தி, ரைட்டர் முத்துசாமி, ஸ்ரீ டெய்லர் கடையில் வேலை செய்யும் லிஷாந்த் ஆகியோர் காரணம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் தனலட்சுமியிடம் விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் செல்வனுக்கும் தனலட்சுமிக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. ஆனால் தனலட்சுமி செல்வனிடம் இருந்து பணம் வாங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி செல்வத்துடன் தனலட்சுமி வீட்டில் நெருக்கமாக இருப்பதை தனது மகள் மூலம் செல்போனில் வீடியோ எடுத்து அதை வைத்து செல்வனை மிரட்டி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து செல்வன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் கடிதத்தில் இருந்த அனைவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.