Categories
மாநில செய்திகள்

இது என்ன புது டுவிஸ்ட்…. எடப்பாடிக்கு மீண்டும் செக் வைத்த ஓபிஎஸ்….. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுகவில் ஒற்றை தலமை விவகாரம் தலைவிரித்து ஆடியது. கடந்த ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு விஷயத்தில் என்ன தீர்ப்பு என்று அதை அதிமுக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டது. அதன்படி ஓ.பன்னீர்செல்வம் முதல் முறையும், எடப்பாடி பழனிச்சாமி இரண்டாவது முறையும் மகிழ்ச்சி அடைந்தனர். கட்சியின் இடைக்கால பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன் பிறகு அலுவலகத்திற்கு சென்று கட்சியினருடன் ஆலோசனையின் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கக்கூடிய வகையில் ஓபன்னீர்செல்வம் விஷயத்தை கையில் எடுத்துள்ளார். அதாவது, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், அதிமுக பொது குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக அலுவலகம் வரும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அனுமதிக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை யாரையும் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்னதாக ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடந்த போது அதிமுக கட்சி தலைமை அலுவலகம் அருகிள் வன்முறை வெடித்தது. இதனால் அலுவலகத்தை வருவாய் துறையினர் பூட்டி நடவடிக்கை எடுத்தனர். இதனை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்சி அலுவலகத்தை திறந்து சாவி எடப்பாடியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதே நேரத்தில் ஒரு மாதத்திற்கு கட்சி அலுவலகத்தில் யாரும் வரக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவிட்டது. அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்த வன்முறை குறித்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை போலீஸ் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் சிபிசிஐடி போலீசார் நேற்று காலை 7 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து வன்முறை நடந்த போது காணாமல் போன ஆவணங்கள், பொருட்கள் பற்றி குறிப்பெடுத்துக் கொண்டனர். அப்போது தடவியல் நிபுணர்களும் ஆதாரங்களை சேகரித்தனர். அதுமட்டுமில்லாமல் சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்யப்பட்டது. இத்தகைய பரபரப்பு மத்தியில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்வாரா? இல்லை ஓபிஎஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அதிரடியில் இறங்குவார்களா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |