பிக்பாஸ் 6-வது சீசன் சென்ற அக்டோபர் 9ம் தேதி துவங்கியது. மும்முரமாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அத்துடன் ஜி.பி. முத்து தாமாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதையடுத்து கடந்த வாரம் அசல் கோளாறு வெளியேற்றப்பட்டார். அதாவது பிக்பாஸ் வீட்டில் பெண்களிடம் அத்துமீறியதால்தான் அசல் வெளியேற்றப்பட்டார் என ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பெண்களிடம் அத்துமீறவில்லை எனவும் அப்படி தெரிந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அசல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில் “என் வீட்டில் நான் எப்படி இருப்பேனோ அப்படி தான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தேன். சக போட்டியாளர்களை என் வீட்டில் உள்ளவர்களை போன்று தான் நினைத்தேன். நான் தவறான பார்வையில் பார்த்திருந்தேன் எனில் உள்ளே இருப்பவர்களுக்கு அது தெரிந்திருக்கும்.
ஒருத்தர் எப்படி பார்க்கிறார்கள் என்பதனை தெரிந்துகொள்ளும் அளவிற்கு மூளை இருப்பவர்கள் தான் உள்ளே இருக்கிறார்கள். நான் தவறாக எதும் செய்து இருந்தால் கண்டிப்பாக வெளியே வந்திருக்கும். இதற்கிடையில் கேமராவுக்கு முன்னாடி இப்படி எல்லாம் செய்வேனா..? நான் செய்தது பார்க்கிறவர்களை தொந்தரவு செய்து இருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இது எனது இயற்கையான குணம். இது பொது வெளியில் பார்க்கிறவர்களுக்கு பிடிக்கவில்லை எனில் நான் மாற்றிக்கொள்கிறேன்” என அசல் கூறினார்.