Categories
சினிமா தமிழ் சினிமா

இது என் லைஃப் என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன்…. பெண் ரசிகையை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய விஜயலட்சுமி….!!!!!

நடிகை விஜயலட்சுமி பெண் ரசிகை ஒருவருக்கு  சரமாரியாக பதிலடி கொடுத்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழ் சினிமா திரையுலகில் சென்னை-28 படத்தின் மூலமாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. தமிழ் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகளான  இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், ஆடாம ஜெயிச்சோமடா போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன் ஒருவரின் கமெண்டிற்கு  இவர் அளித்துள்ள பதில் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கியதும் சன் டிவியில் நாயகி  சீரியலில் நடித்த இவர் அதிலிருந்து பாதியில் விலகி கொண்டார். இதனைத் தொடர்ந்து டும் டும் டும் சீரியலில் நடித்து உள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஜி ஒளிபரப்பான சர்வர் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும் விஜய் டிவியில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கிருஷ்ணா நடித்த பண்டிகை படத்தை இயக்கிய பெரோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் இருக்கின்றான்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியிட்டு இருக்கின்றார். அதற்கு ஒரு பெண் “இந்த ஆட்டம் உனக்கு தேவையா ஒரு அம்மாவா இருக்க” என கமெண்ட் செய்ய, அந்தப் பெண்ணை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் விஜயலக்ஷ்மி. தன்னுடைய ரிப்ளேவில், அம்மாவானால் மூலையில் உட்கார்ந்து அய்யய்யோ எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு வருத்தப்படனுமா? நீ வேணும்னா வருத்தப்படு உனக்கு சிலை வைப்பாங்க. இது என் லைஃப் என் இஷ்டத்துக்கு நான் இருப்பேன் உங்க அட்வைஸ் கூந்தலை பின்னி நீங்களே வைத்துக் கொள்ளவும் என்று சரமாரியாக பதிலடி விலாசி  இருக்கின்றார். அவரின் இந்த பதிவு இணையதளத்தில் மிகவும் வேகமாகப் பரவி வருகின்றது.

Categories

Tech |