Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இது எப்படி செத்துச்சு…? மர்ம முறையில் இறந்த உயிர்… வனத்துறையினர் விசாரணை..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனியார் தோட்டத்தில் மர்மமான முறையில் காட்டெருமை ஒன்று இறந்து கிடந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள காட்டு எருமைகள் அடிக்கடி நகர் பகுதிகளுக்கு வந்து குப்பைகளில் வீசப்படும் பழங்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை தின்று விடுகின்றன. இதன் காரணமாக காட்டெருமைகள் உடல்நல குறைபாடு ஏற்பட்டு மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கொடைக்கானல் பாக்கியபுரம் என்னுமிடத்தில் காட்டெருமை ஒன்று தனியார் தோட்டத்தில் இறந்து கிடந்தது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் காட்டெருமையின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர்களை வரவழைத்து உடல் பரிசோதனை செய்து அதன்பின் அதன் உடலை புதைத்தனர். இதையடுத்து காட்டெருமை எப்படி இறந்தது ? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |