மர்மமான முறையில் உயிரிழந்த காவலாளியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் பண்ணை வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டின் காவலாளியாக தேசிங்கு என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அவரது மகன் மோகநாதன் என்பவர் சாப்பாடு கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு தேசிங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகநாதன் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தேசிங்கு எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.