பேருந்து நிலையம் அருகே சடலமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடியும் முருகானந்தம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே முருகானந்தம் தீக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முருகானந்தத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முருகானந்தம் எப்படி இறந்தார்? அவருக்கு தீக்காயம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.