Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி நடந்திருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

ஏரியில் கிடந்த  வாலிபரின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கழிஞ்சூர் பகுதியில் கட்டிட மேஸ்திரியான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள ஏரியில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டன் குடிபோதையில் ஏரியில் விழுந்து விட்டாரா? இல்லை யாராவது கொலை செய்து விட்டார்களா? எந்த கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |