Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. பொதுமக்கள் அளித்த தகவல் …. போலீஸ் விசாரணை ….!!!!

கிணற்றில் கிடந்த தொழிலாளியின் சடலத்தை  காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காட்டுகுடியிருப்பு பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக சென்னையில் பணிபுரிந்து வரும் தனது மகளுடன் இருக்கப்போவதாக உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முத்து அதே பகுதியில் அமைந்துள்ள கிணற்றில்   பிணமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்து எப்படி இருந்தார்? இல்லை யாராவது கொலை செய்து விட்டார்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |