குடோனில் பற்றி எரிந்த தீயை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் கோபி(51) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோன் வல்லன்குமாரன்விளையில் அமைந்துள்ளது. இந்த குடோனில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
ஆனால் இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த அனைத்து பொருட்கள் எரிந்து நாசமானது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.