வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகரில் வீட்டின் முன்பு ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து லாரியில் இருந்த அட்டைகள் முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.