Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது எப்படி நியாயமாகும்….? எல்.பி.டபிள்யூ முறையில் மாற்றம் தேவை… அஸ்வின் வலியுறுத்தல்…!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில பேட்ஸ்மேன்கள் வித்தியாசமான முறையில் பந்தை அடிக்க முயற்சி செய்வார்கள். அதாவது வலது கை பக்கம் உள்ளவர்கள் இடது கை பக்கமாகவும், இடது கை பக்கம் உள்ளவர்கள் வலது கை பக்கமாகவும் பேட்டிங் செய்வார்கள். அதுமட்டுமின்றி சிலர் உடலை திருப்பாமல் பேட்டிங் செய்யும் ஸ்டைலை கொண்டு இருக்கின்றனர். இது கிரிக்கெட்டில் சகஜமாகி விட்டதால் எல்.பி.டபுள்யூ விதிமுறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என மூத்த பந்துவீச்சாளர் அஸ்வின் கூறியுள்ளார். இது தொடர்பாக அஸ்வின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையேயான மேட்சின் போது ஜோ ரூட் 10 முறை ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். இதில் ஒரு பந்து மட்டுமே பேட்டில் பட்டது. இந்நிலையில் ஒரு பேட்ஸ்மேன் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி தன்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றும் நிலை இருக்கிறது. இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். இதனையடுத்து ஒரு பவுலர் பந்தை வீசும் போது எந்த ஸ்டைலில் பந்தை வீசுகின்றோம் என்ற தகவலை நடுவரிடம் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகு பந்து வீசுவதற்கு சில கட்டுப்பாடுகளும் இருக்கிறது. ஆனால் பேட்டிங் செய்பவர் களுக்கு எந்த வித கட்டுப்பாடும் கிடையாது.

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேட்டிங் செய்யலாம். இதனால் பேட்ஸ்மேன் களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. பவுலர்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பேட்ஸ்மேன்கள் ஸ்விட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் முறையில் பேட்டிங் செய்யும்போது வந்து லெக் ஸ்டெம்புக்கு வெளியே பிட்சாகி பேட்டிங்கில் படாமல் காலுறையில் படுவதற்கு எல்.பி.டபிள்யூ முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இதுதான் நியாயமானதாக இருக்கும் என அஸ்வின் கூறியுள்ளார்.

Categories

Tech |