Categories
அரசியல் மாநில செய்திகள்

இது எல்லாமே ஏமாத்து வேலை!…. இப்படிலாம் சொல்லவே கூடாது…. டென்ஷனான ஜெயக்குமார்….!!!!

சசிகலா தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று தொடர்ந்து கூறி வருவதாக அதிமுக தரப்பில் மாம்பலம் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் சைதாப்பேட்டை கோர்ட்டில் சசிகலா மீது புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அந்த மனுவில் இந்திய தண்டனைச் சட்டம் 34, 420 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா மீது நடவடிக்கை எடுக்க மாம்பலம் காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு மட்டுமில்லாமல் தேர்தல் ஆணையமும், டெல்லி உயர் நீதிமன்றமும் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் நிர்வாகிகள் என்று கூறி உத்தரவிட்டுள்ள நிலையில் சசிகலா தாம் தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று தொடர்ந்து பிரகடனப்படுத்தி வருவது ஒரு ஏமாற்று வேலை என்று ஜெயக்குமார் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். அதேபோல் தேர்தல் ஆணையத்தையும், நீதிமன்றத்தையும் மதிக்காமல் சசிகலா தொடர்ந்து செயல்பட்டு வருவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |