11 ஆவணங்களில் வாக்கு செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வாக்காளர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் 275 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடக்கிறது. எனவே வாக்காளர்கள் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள புகைப்படத்துடன் கூடிய வங்கி அஞ்சல் கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை, நிரந்தர கணக்கு எண் அட்டை, ஓட்டுனர் உரிமம், இந்திய கடவுச்சீட்டுடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மகாத்மா காந்தி பணி ஊரகத் திட்ட அட்டை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவல் அட்டை, உள்ளிட்ட 11 வகையான ஆவணங்களை கொண்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தலாம் என்று மாவட்ட ஆட்சியர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.