Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எல்லாம் சேர்ந்தா இத சும்மா விடுமா…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

திருநெல்வேலியில் புள்ளிமான் நாய்கள் கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் சம்பவத்தன்று இரையைத் தேடி புள்ளிமான் வந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியிலிருந்த நாய்கள் ஒன்றாக சேர்ந்து மானை பார்த்ததும் கடிப்பதற்கு துரத்தி சென்றுள்ளது. இதனால் உயிரை காப்பாற்ற தப்பி ஓடிய புள்ளிமான் அங்கிருந்த சாக்கடைக்குள் தெரியாமல் தவறி விழுந்தது. இதனால் அதற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அதன்பின் வசமாக சிக்கிய மானை நாய்கள் அனைத்தும் கடித்துக் குதறியது. இதனால் புள்ளிமான் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இத்தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |